Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமரின் குற்றச்சாட்டிற்கு இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே சிங்கள வெறிப்போக்கை ராஜபக்ஷே கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது.



பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஜூன் 29ம் திகதி டெல்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில் பிரதமர் கூறியதாவது:

இலங்கையைப் பொறுத்தவரை சிங்களர்களின் இனவெறி ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

அங்கு தமிழர்கள் சமமான மதிப்பு, மரியாதையுடன் வாழ முடியவில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் எல்லாம் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழகத்தை இந்திய அரசின் பக்கம் தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது.

இந்தியாவின் இலங்கை கொள்கை இரு நாடுகளும் இணைந்து செயல்படும் விதமாக அமையவில்லை. தமிழர்கள் விடயத்தில் இலங்கை ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்பது உண்மையே.

தமிழக சட்டசபையில் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாகவும், ராஜபக்ஷேயை கண்டித்தும் போடப்பட்ட தீர்மானம் இதற்கு ஒரு உதாரணம். இந்திய - இலங்கை உறவில் உள்ள நெருடல்களைப் புரிந்து கொண்டு இப்பிரச்னை குறித்து தீர்மானம் இயற்றியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டது ஒரு வகையில் நன்மை தான். ஆனாலும் அதனால் தமிழர்களின் பிரச்னை தீர்ந்து விடாது. இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஏராளமான மனக்குறைகள் உள்ளன. தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு பிரதமர் பேட்டியளித்தார்.

ஆனால் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பல நேரங்களில் பெரிய அளவில் செய்திகள் வெளியிடும் பத்திரிகைகள் பிரதமர் தன் பேட்டியின் போது இலங்கை நிலவரம் குறித்து தெரிவித்த தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த போர் 2009ல் முடிவுக்கு வந்தது. அதன்பின் இப்போது தான் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் வெளிப்படையாக அழுத்தமான கருத்தைக் கூறியுள்ளார்.

ராஜபக்ஷே அரசை அவர் விமர்சித்தது மட்டும் அல்லாமல் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கையையும் ஏற்றதுடன் இந்த விடயத்தில் அதிபர் ராஜபக்ஷே அத்துமீறலைக் கண்டித்த அமெரிக்க அரசின் தூதரகத் தகவலையும் பிரதமர் ஆதரித்திருப்பது முற்றிலும் வித்தியாசமானது.

இந்த விமர்சனத்திற்கு ராஜபக்ஷே அரசும் பதில் அளிக்கவில்லை. இதிலிருந்தே இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் உண்மையே என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இந்திய - இலங்கை உறவு என்பது வெளிப்படையாக குறைகூறி விமர்சிப்பது என்பது கயிறுமீது நடப்பது போல தந்திரம் அதிகம் தேவைப்படும் விடயம்.

அதிகம் பார்க்கப்பட்டவை