Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

இறுதி யுத்தததின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி கூட செலுத்த முடியாத அச்சுறுத்தல் உள்ள சூழ் நிலையிலேயே நாம் இப்போது உள்ளோம் என் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் இவ்வஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இறுதி யுத்தததில் உயிரிழந்த பொது மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்கள். எமது இனத்தின் அடையாளங்களை திட்டமிட்ட வகையில் அழிப்பதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் தற்போது தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. தமிழ் பிரதேசங்களில் பௌத்த கோயில்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்படுகின்றன. எமது கலாச்சாரங்கள் பண்பாடுகள் சிதைக்கப்படுகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று யுத்த்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவர்களுக்கும் நினைவஞ்சலி கூட செய்ய முடியாத துர்பாக்கியமான ஒரு சூழ் நிலையிலேயே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அன்று முதல் இன்று வரை எம்மை அச்சுறுத்தும் நடவடிக்கைகளையே தானம் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றனது என்றார்.

அதிகம் பார்க்கப்பட்டவை