Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

மரண அச்சுறுத்தல்கள் தமக்கு புதிதல்ல எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னர் விடுதலைப்புலிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல் வந்ததாகவும் தற்போது ஆளும் அரச தரப்பினரிடமிருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



பதுளையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது:-

இந்த நாட்டில் நிலவும் இலஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழித்தால் நான் அளித்தள்ள பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகளை விடவும் மேலதிகமான நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும்.

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கல், சமுர்த்தி கொடுப்பனவை உயர்த்துதல், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புபட்ட வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கான வரியினை இல்லாதொழித்தல், அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நான் வழங்கியுள்ளேன்.

இந்த வாக்குறுதிகளை விமர்சிக்கும் எதிரணியினர் இவற்றை எப்படி பொன்சேகா நிறைவேற்றப் போகிறார்? எனக் கேட்கின்றனர்.

இந்த நாட்டில் தற்போது தலைவிரித்தாடும் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்தால் இவற்றை நிறைவேற்றுவது மிகவும் இலகுவான விடயமாக மாறிவிடும். அதைவிடவும் அதிகமான வேலைகளை நாட்டு மக்களுக்காக செய்ய முடியும்.

என்னுடன் இணைந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளுமற்றவர்கள். அதனால் என்னுடன் இணைந்து ஊழலை ஒழிக்க புறப்பட்டுள்ளார்கள்.

எமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. மரண அச்சுறுத்தல்கள் ஒன்றும் எமக்குப் புதிதல்ல. ஏற்கனவே விடுதலைப்புலிகள் எமக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார்கள். இன்று அரச தரப்பினர் மரண அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்" என்றார்.

இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் இராணுவ வீரருமான கப்டன் மினிமல் முனசிங்க, சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக இக்கூட்டத்தில் அறிவித்தார்.

அதிகம் பார்க்கப்பட்டவை