Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com


விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை வெள்ளைக்கொடியுடன் சரணடையுமாறு புலித்தேவனுக்கு, பாலித கொஹண எழுத்து மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் அனுப்பிய தகவல்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.


2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுடனான போரில்இ இலங்கை இராணுவம் சரணடைந்த பா.நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட 20 பேரை துப்பாக்கிச் சூட்டின் மூலம் படுகொலை செய்திருந்தது.

விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் பாலித கோஹண வெளிநாட்டமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார்.. இச் சரணடைவு குறித்து அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து, வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு குறுந்தகவல் ஒன்றை மே 17 ம் திகதி அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளன.

இத் தகவல் தற்போது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு அது சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு போர்க்குற்ற ஆதாரமாக மாறும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாகவும் கருதப்படுகின்றது.

இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்து கடைசிக்கட்டத்தை நெருங்கியிருந்த தறுவாயில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், ஐரோப்பிய நடுநிலையாளர் ஊடாக புலிகளின் முக்கியஸ்தர்கள் நிபந்தனையின்றி சரணடைய முன்வருவதாக பாலித கொஹணவிற்கு அறிவித்துள்ளார்.

அதனையடுத்து அன்றைய வெளிநாட்டமைச்சின் செயலாளலரான பாலித கொஹண அரசாங்கத்தின் சார்பிலேயே சரணடைவதற்கான வழிகாட்டலுடனான தகவல்களை புலித்தேவனுக்கு அனுப்பியுள்ளதாக உறுதியாக நம்பப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி புலிகள் சரணடையத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது இலங்கை அரசினதும் இராணுவத்தினதும் சகல உயர் மட்டத்துக்கும் தெரிந்திருந்தது என்பதற்கான ஆதாரங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

புலிகளின் சரணடைதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இபாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் உத்தரவாதம் வழங்கியிருந்ததுடன், அவர்களுக்கு ஊறு விளைவிக்கப்படாது என்று அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக இருந்த பசில் ராஜபக்ஷவும் அறிவித்திருந்தார் என்று ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 மே மாதம் 17ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சரியாக காலை 8.46 மணிக்கு பாலித கொஹண தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து குறுந்தகவல் ஒன்றை வெளிநாட்டிலுள்ள ஒருவருக்கு அனுப்பியுள்ளார். அதில் பா.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரை வெள்ளைக்கொடிகளைக் ஏந்தியவாறு பசில் ராஜபக்ஷ குறிப்பிட்ட இடம் வழியாக வந்து 58ம் படைப் பிரிவிடம் சரணடையுமாறு பாலித கொஹண குறிப்பிட்டிருந்தார்.

“இப்போது படையினரைச் நோக்கிச் செல்லுங்கள். மெதுவாக! ஒரு வெள்ளைக்கொடியுடன். வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றுங்கள். படைவீரர்கள் தற்கொலைக்குண்டுதாரிகள் குறித்து மிரண்டு போயுள்ளனர்“ என்பதாக பாலித கொஹணவின் தகவல் அமைந்திருந்தது.

அவரிடம் இருந்து பெறப்பட்ட குறுந்தகவலை வெளிநாட்டில் உள்ளவர் புலித்தேவனின் துராயா ரக செய்மதித் தொலைபேசிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்தத் தகவலைத் தொடர்ந்து மறுநாள் காலை 6.30 மணியளவில் பசில் ராஜபக்ஷ மற்றும் பாலித கோஹண ஆகியோர் கூறியது போல புலித்தேவன், மற்றும் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 15 பேர் வெள்ளைக்கொடியை தலைகளுக்கு மேலால் ஏந்தியபடி முதல் கட்டமாக சரணடையச் சென்றுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களின் சரணடைதலை ஏற்றுக் கொள்ளுமாறு கொழும்பிலுள்ள நோர்வேத் தூதுவர் அடிக்கடி இலங்கை ஜனாதிபதியின் சகோதரர்களுடன் தொடர்பு கொண்டவராகவே காணப்பட்டார் என்று அமெரிக்கத் தூதரக கேபிள் தகவல்கள் மூலம் கசிந்த விடயங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

ஆனால் சரணடையும் விடுதலைப்புலிகள் விடயத்தில் வழமையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவர்களைத் தீர்த்துக்கட்டுமாறு களத்தில் உள்ள கட்டளையிடும் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டத்திலிருந்து கடுமையான உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதனை அறியாத நிலையில் பசில் ராஜபக்ஷ மற்றும் பாலித கோஹண ஆகியோரின் ஆலோசனையின் பிரகாரம் தமது குடும்பத்தார் சகிதம் சென்ற புலித்தேவன், மற்றும் பா.நடேசன் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தினரையும் 58 வது படைப்பிரிவு ஒரு ட்ரக் வண்டியில் ஏற்றி மணல் திட்டுகளின் பின்னால் அழைத்துச் சென்றுள்ளது. அவர்கள் சென்று சுமார் 30 நிமிடங்களில் பலத்த துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக இச்சம்பவம் நடந்தபோது களத்தில் நின்ற சாட்சியொருவர் தெரிவித்துள்ளார்.

மணல் திட்டுக்கு பின்னால் இவர்களை அழைத்துச் சென்றதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை அவதானிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் புலிகளின் முக்கியஸ்தர்கள் வெள்ளைக்கொடிகளை ஏந்தி வருவதை தனது இரு கண்களால் அவதானித்ததாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்..

மணல் திட்டுக்கு பின்னால் இவர்களை அழைத்துச் செல்லப்பட்ட பின் படையினர் துப்பாக்கியால் சுடுகின்ற சத்தத்தை கேட்க முடிந்தது. அவர்கள் சத்தமிட்டு கத்தினர். இயந்திரத் துப்பாக்கிச் சத்தம் போல் வேகமாக சுடும் சத்தம் கேட்டதாகவும் குறித்த நபர் மேலும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் உடனடியாகவே புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது யாவரும் அறிந்ததே.

ஆயினும் விடுதலைப்புலிகள் அவர்களின் ஏனைய சகாக்களால் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் மனிதாபிமான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டதாகவும் இலங்கை அரசு கூறுகின்றது. பொது மக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இராணுவம் நடந்து கொண்டதாக பாலித்த கொஹண அண்மையில் பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய போது தெரிவித்திருந்தார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள பாலித கோஹண, தற்போது ஐநாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகக் கடமையாற்றுகிறார். இவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதனை நீதிமன்ற விசாரணைக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

புலிகளின் அரசியல் தலைவர்களை வஞ்சகமாக ஏமாற்றிஇ அவ்விடத்துக்கு வரவழைத்து, அவர்கள் கொலைசெய்யப்பட காரணமாக இருந்தவர்களில் பாலித கோஹண மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு அவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சரணடைவு தொடர்பாக பாலித கோஹண அனுப்பிய தகவல்களும், அவர் கையடக்கத் தொலைபேசியில் இருந்து வந்த குறுந்தகவல்களும் ஆதாரமாக இணைக்கப்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இந் நிலையில் ஹெரல்ட் துப்பறியும் நிறுவனம் இது குறித்து மேலதிகத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தான் சரணடைவதற்காக வழியை அவர்களுக்கு குறுந்தகவல் ஊடாக தான் சொன்னதாகவும், அவர்களின் உயிருக்கு உத்தரவாதத்தை தான் கொடுக்கவில்லை என்று பாலித கோஹண ஆங்கில இணையம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் தான் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் என்ற வகையில் எனக்கு எந்த ஒரு பயங்கரவாதியும் சரணடைவது தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடும் அதிகாரம் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ ஒருபோதும் இருக்கவில்லை என்பதை நான் தெளிவாகக் கூறியுள்ளேன்.

அந்தக் குழு சரணடைய முயற்சிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. விசாரணைக்கு பதில் அளிப்பதாகவே அந்த தகவல்கள் இருந்தன. அது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் எவரிடம் இருந்தும் வந்ததாக இருக்கவில்லை. சரணடையும் முயற்சி ஒன்றுக்கான ஏற்பாடாகவும் அது இருக்கவில்லை. அதைச் செய்யும் அதிகாரமும் எனக்கில்லை.

என்னுடைய புரிந்துணர்வின்படி பொதுவாக அவ்வாறுதான் சரணடைதல்கள் இடம்பெறும். அதுதான் நான் வழங்கக் கூடிய ஆலோசனையும் கூட என்று பாலித கொஹன்ன தெரிவித்துள்ளார். புலித்தேவனும் நடேசனும் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் ஹெரால்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்

எப்படியிருந்தபோதிலும் பாலித கோஹணவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மிகவும் வலுவான ஆதாரங்களைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

இதற்கிடையே பாலித கொஹண மூன்றாம் தரப்புக்கு அனுப்பிய தகவலை புலித்தேவன் சரணடைவது பற்றி அனுப்பியிருந்ததற்கு பதிலாகவே அமைந்திருந்தது என்பதை அவுஸ்திரேலிய ஊடகமான ஹெரால்ட் மூன்று சுயேச்சை மூலங்கள் ஊடாக ஊர்ஜிதம் செய்துள்ளது.







.

அதிகம் பார்க்கப்பட்டவை