Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

வவுனியா, செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 சிறுவர்கள், 2 பெண்கள் அடங்கலாக 5 அப்பாவி தமிழர்கள் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தினால் அந்த முகாமில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த 5 பேரும் முகாமிலிருந்து விறகு சேகரிக்கச் சென்ற போதே இராணுவத்தினர் சுற்றிவளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவப் பேச்சாளர் அங்குள்ள இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்த போது, முகாமிலிருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்ததாகவும், அதையடுத்து தற்பாதுகாப்புக்காக படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.
இந்த மோதலின் காரணமாக இரு முகாம்வாசிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புஇந்த மாதம் 17 ஆம் தேதி முதல் இலங்கை அரசு அங்குள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை நிறுத்திவிட்டததால், உலக உணவுத் திட்டத்தால் வழங்கபடும் உலர் உணவுகளை சமைக்க தேவைப்படும் விறகுகளை எடுத்து வருவதற்காகவே மக்கள் ஒரு முகாமிலிருந்து மற்ற முகாம்களுக்கு செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கிறார்.

அதிகம் பார்க்கப்பட்டவை