Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

தனியாரிடம் இருந்து அரசாங்கத்திற்கு பொறுப்பேற்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் 2009 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில்,10 பில்லியன் ரூபா நஷ்டம் காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை முன்னகர்த்தி செல்ல முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறுப்புகள், எட்டாயிரத்து 159 மில்லியன் அதாவது 8.1 பில்லியன்களாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடத்தில் இந்த நிறுவனத்தின் பொறுப்புகள் 3 பில்லியன்களாக மாத்திரமே காணப்பட்டது.
முன்னர் எமிரேட்ஸ் விமான சேவையின் 51 வீத பங்குகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் இலாபகரமான நிறுவனமாக இயங்கி வந்தது.
எனினும் இந்த நிறுவனம் தனியார் மயப்படுத்தப்பட்டதாக ஜே வி பி தெரிவித்து வந்த குற்றச்சாட்டுக்கு நல்லெண்ணத்தை காட்டும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எமிரேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை பெற்று அதனை அரசாங்கத்தின் உடமையாக்கினார்.
இதேவேளை அரசாங்கத்தின் நிதியீட்டுடன் இயங்கிவரும் மிஹின் எயார் விமானச்சேவையும் பல பில்லியன் ரூபாய்கள், அளவில் நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தநிறுவனத்தினால் பல அரச வங்கிகளில், பாரிய கடன்கள் பெறப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகம் பார்க்கப்பட்டவை