அதிகளவான இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையிலேயே வெளிநாடுகளுக்குச் செல்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. உலகில் இரண்டாவது கூடுதல் சட்டவிரோத குடியேற்றக்காரர்களாக இலங்கையர்களே திகழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் நடைமுறை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சில முகவர் நிறுவனங்கள் கூட ஆட்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், வெளிநாட்டு வேலை வாய்ப்புச் சட்ட மூலம் திருத்தி அமைக்கப்பட்டுள்ள காரணத்தினால் சட்டவிரோதமாக இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதனை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகளவான இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்
Lagt inn av
chandran
27.09.09



0 kommentarer