Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒவ்வொரு போட்டியிலும் அஸ்வினின் அபாரமான பந்துவீசும் திறமையைக் கண்டு, மேலும் மேலும் தமிழன் எனப் பெருமைப்பட்டனர். இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. கடந்த புதன்கிழமை சென்னை வந்து சேர்ந்த அஸ்வின் தனது பேஸ்புக் வலைப்பக்கத்தில் உலகக் கோப்பை 20-20 போட்டியிலிருந்து வெளியேறியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் 20-20 போட்டிக்கு தன்னை ஆயத்தப்படுத்தினார். திடீரென வியாழன் அன்று இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததை பாராட்டி “ ஒரு சிறந்த அணி முதல் அரையிறுதியில் வெற்றி அடைந்துவிட்டது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து இன்று (06.10.12) நாளைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று இலங்கை அணி உலகக் கோப்பையை கைப்பற்றும்” எனக் கூறியிருக்கிறார். இவரது இந்த நிலைத் தகவலைப் பார்த்த தமிழ் இளைஞர்கள் பலரும் அஸ்வின் வலைப்பக்கத்தில் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு அணிக்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்களா. ஒரு தமிழனாக இருந்துகொண்டு இப்படி சொல்வது தவறானது” என்று தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்தனர். அஸ்வின் தான் செய்த தவறின் தன்மையை உணர்ந்து ”நான் இலங்கையின் ஆதரவாளன் இல்லை. இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம். ஆனால் பொருத்திருந்து பாருங்கள் நான் சொன்னது தான் நடக்கும்” என்று மறுபடியும் அதையே கூறியிருக்கிறார்.

அதிகம் பார்க்கப்பட்டவை