Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com


யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தை நுழைக்கும் வகையில் தமிழ் - பௌத்த அறநெறிப்பாடசாலை ஒன்று நாளை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்தத்தின் பின்னர் யாழ். பழம் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பௌத்த சங்கம், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதாக கூறிக்கொண்டு, மாணவர்களுக்கு சிங்கள வகுப்புக்களை நடத்திக் கொண்டு தனது வேலையை ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாக கந்தரோடைப்பகுதியில் காணப்படும் விகாரை அமைப்புக்களை முன்னிறுத்திக் காண்பித்துக் கொண்டு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்ற போர்வையில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பௌத்த மயமாக்கலை செய்து வருகின்றது. ஆனால் தமிழ் இலக்கிய வகைப்பாட்டின் படி சங்கமருவிய காலத்தின் பிற்பகுதியில் தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்தியிருந்த பௌத்த மதத்தினாலேயே அப்போது தமிழகத்துடன் அதிக தொடர்புகளைக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் இவ்வாறான விகாரை அமைப்புகள் வந்திருக்கலாம் என்ற கருத்துள்ளது. இந்நிலையில் யாழில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என கூறிக்கொண்டு, முற்றுமுழுதாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி பௌத்த மயமாக்கலுக்கான ஒரு வேலைத்திட்டமாகவே இது பார்க்கப்பட வேண்டும். இதேபோல் குறித்த தமிழ் பௌத்த அமைப்பின் தலைவரே வடக்கில் தான் ஆளுநராக நியமிக்கப்பட்டால் 50ஆயிரம் புத்தர் சிலைகளை நிறுவுவேன் என சபதம் செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காரசாரமான செய்திகள் வெளியாகியிருந்தன.

அதிகம் பார்க்கப்பட்டவை