Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

> நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்பை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கு முன்னதாக இருந்து அமெரிக்கா இலங்கையுடன் மிகவும் நெருங்கிய நட்புறவை பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்ட அமர்வுகளில கலந்து கொண்டுள்ள இலங்கையின் ஆங்கில தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு பிளேக் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், வடக்கு மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை என தாம் குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் உள்ளிட்ட சில விடயங்களில் அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் பல பிரதேசங்களில் அரசாங்கம் உட்கட்டுமான வசதிகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அரசாங்கத்தை பாராட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கம் இரண்டு விதமான அணுகுமுறைகளை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு ஆண்டில் மாகாணசபைத் தேர்தலை நடத்தியது எனவும், வடக்கில் தேர்தலை நடாத்த சுமார் நான்கு ஆண்டுகள் செல்லக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்க முனைப்புக்களை துரித கதியில் மேற்கொள்வதன் மூலம் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்ற முடியும் என்பதே தமது நிலைப்பாடு என ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

அதிகம் பார்க்கப்பட்டவை