Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

நாடுகடந்த தமிழீழ அரசின் முதல் தேர்தல் நடந்து மூன்று வருடங்களுக்குள் அடுத்த தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசின் மதியுரைக் குழுவினரின் சிபார்சின் அடிப்படையிலேயே எமது முதல் தேர்தல் நடந்தது. மக்களிடமும் இதையே கூறி எமது தேர்தலை நடாத்தினோம். தற்பொழுது செயற்படும் பாராழுமன்ற்த்தின் இயங்குகாலம் முதலாவது தேர்தல் நடைபெற்ற் மே 2, 2010 இருந்து மூன்று வருடங்களுக்கானது. இதன் அடிப்படையிலேயே யாப்பு தயாரிக்கப்பட்டு அவை செயற்படத் தொடங்கியது. எமது அடுத்த தேர் தல் 2013ம் ஆண்டு மே 2ம் திகதிக்கு முன் நடைபெற வேண்டும். தற்போதைய பாராளுமன்றம் கலைக்கபட வேண்டிய கடைசி நாள் 2013ம் ஆண்டு ஏப்ரல 1ம் திகதியாகும். இதை மாற்றவோ அல்லது மறுக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. தேசமீட்பிற்கான இறுதி நகர்வினை வரையவேண்டிய நான்காவது அமர்வு, அதுபற்றி எதுவுமே பேசாது, வாடிநிற்கும் எம் உறவுகள் நலன் கருதி எந்தத் தீர்மானமும் எடுக்காது, தமது இருப்பை தக்கவௌக்க மூன்றுவருட பாராளுமன்ற்த்திற்கான காலத்தை ஐந்து வருடமாகவும், இதற்கு இணங்கிய 15 உதவி மந்திரிகளை சம்பிரதாயத்துக்கு எதிராக அமச்சரவையில் பங்குகொள்ள பிரேரித்ததுமே ஐந்து நாள் அமர்வின் முக்கிய விடையங்கள்மென்றால் எமது திறமைக்கு எல்லை உண்டா? திறமைமிக்க நிர்வாகமும், தேவையான பணமும் இல்லாத நிலையில் எம்மால் எதையுமே சாதிக்கமுடியாது. மந்திரிசபையை மாற்றியோ, மந்திரவாதிகளை அழைத்தோ ஒன்றும் நடக்கப் போவதில்லை. காலத்தைக் கடத்தாமல், நேரத்தை வீணடிக்காமல், எமது விடுதலையை பின்போடாமல் அடுத்த மே மாதத்துக்க்கு முன்பாகவே தேர்தலை -நடாத்தி, தரமானவர்க்ளை உள்வாங்கி, எமது அரசியல் போரை முன்மனெடுப்பதே, இன்றைய நிலையில், சாலச்சிறந்தது. இன்று, எமது அரசியல்ப் போருக்கு சர்வதேசமே தங்களைத் தயார் செய்து வரும்போது, நாமும் இந்த மூளைக்கும் மூளைக்குமான அரசியல் போருக்கு எம்மைத் தயர்ர்செய்ய வேண்டியது அவசியமமல்லவா. எம் இனத்தின் விடுதலைக்காக தம்மை அற்பணிப்பதை ஓர் வரமாக எண்ண்ணிச் செயற்பட்ட எம் உறவுகளின் எதிர்காலத்தை மாற்றார் கையில் மட்டும் விடுவது சரியா? பாசமும் விசுவாசமும் கொண்டவர்களாக நாம் இருந்தும், அறிவும் ஆற்றலும் உள்ள ஓர் உன்னத இனமாக நாம் திகழ்ந்தும், சென்ற தேர்தலிலோ அல்லது அதன்பின் நடந்த தேர்வுகளிலோ திறமைசாலிகளைக எம்மால் கவர முடியாமல் போனதும், இருந்த சிலரும் விலகிசசென்றதும் எமது துர்ரதிஷ்டமே. புதுனை மிக்க தத்துவத்துடன், சிற்ந்த கொள்கையுடன் பல எதிர்பாப்புகளுக்கு மத்தியிலே உருவான நாடுகடந்த தமிழீழ அரசு இன்று, பேராசையும் சுயநலமும் பதவி மோகமும் கொண்டோரின் தலமாக, எம்மோடு சேர்ந்து எம்மவரோடு வாழ்ந்து எம்மைப்போல் நடித்து எம்மை அழிக்க முயலுபவர்களின் அரங்கமாக, தெரிந்தோ தெரியாமலோ சிங்கள அரசின் ஷிருப்பத்துக்கு செயல்ரூபம் கொடுப்பவர்களின் பாசறையாக மாறிவருவது கண்டு உங்களைப்போல் நானும் வேதனையடைகிறேன், வெட்கப்படுகிறேன். இந்த நிலை மாறவேண்டுமானால் தகுதியுடைய புலம்பெயர் உறவுகள் தமது பங்கைதர தாமாக முன்வரவேண்டும். எண்ணத்தால் கருத்தால், நோக்கத்தால் ஒன்றுபட்ட நாம் ஏன் ஒன்று சேர்ந்து செயற்படக் கூடாது? எம் இனத்தின் மீது அக்கறையும் விசுவாசமும்ம் கொண்ட அமைப்புக்களும், சங்கங்களும், தனியாரும், உலகளாவிய ரீதியில், நாடுகடந்த தமிழீழ அரசிற்கு தமது ஆதரவை தவறாது தந்து, எம்ம்வர் கனவை நனவாக்க உதவவேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசு, சர்வதேசத்தைக் கவரும் வகையில் இந்த நூற்றாண்டுக்கான புதுமைமிக்க அரசியல் ததுவத்துடன், ஜனநாயக வழியிலே இயங்கும் ஓர் அரசாங்கம். தேசியத்தலைவரின் இலட்சியப் பாதையில் பயணிக்கும் இந்த அரசு தமிழருக்காக தமிழரால் உருவக்கப்ட்டது. கட்சி பேதமின்றி ஓவ்வொரு தமிழரும் இதற்கு ஆதரவு தரவேண்டும்.. வெற்றியின் விளிம்பில் இருக்கும் நாம் திறமைசாலிகளை ஒருங்கிணைத்து, எமது ஒற்றுமையையும் மக்கள் பலத்தையும் உலகிற்குக் காட்டி, வெற்றிக்கான நகர்வுகளை முன்னெடுதப்பதே மேல். திற,மைசாலிகள் வந்ததால் மக்கள் திரண்டெழுந்தார்களா? மக்கள் திரண்டெழுந்தால் திற,மைசாலிகள் வந்ததார்களா? என் மாற்றரும் வியக்கும் விததில் எமது தேர்தல் நடைபெற வேண்டும். தீயவர்கள் களையயப்பட வேண்டும். கட்சிபேதமின்றி, திறமையின் அடிப்படையில் விசுவாசத்தை மையமாக வைத்து நிறுத்தப்படும் வேட்பாளர்ர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும். நாம் காணும் தமிழீழம் விரைவில் மலரவேண்டும். இதுவே எம் ஆசை, நாம் வேண்டும் வரம். தொடர்புகளுக்கு: கீழ் உள்ள ஈமெயில்/தொ.இல: கனடா 416 829 1362 கலாநிதி ராம் சிவலிங்கம் sivalingham@sympatico.ca

அதிகம் பார்க்கப்பட்டவை