Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

iv dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இலங்கை இராணுவத்தில் வன்னியில் பெண்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்று அதனை இராணுவ பேச்சாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இலங்கை ராணுவப் பணியில் 100 தமிழ்ப் பெண்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை நடைபெறும் எனவும், இதற்காக கடந்த வாரம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுள், ராணுவ பணிக்கு பொருத்தமானவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ தகவல் தொடர்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார் இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் தமிழ்ப் பெண்களே இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். முதல் கட்டமாக 100 பெண்கள் தொண்டர் படையில் இணைக்கப்படுகின்றனர். முற்றுமுழுதாகச் சிங்களவர்களைக் கொண்ட இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள் இணைக்கப்படவுள்ளனர் என்பதை இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய உறுதிப்படுத்தி உள்ளார். சீன செய்தி நிறுவனத்துக்குக் கருத்துத் தெரிவித்த அவர், "இராணுவத்தில் தமிழர்களைச் சேர்த்துக்கொள்வது ஒன்றும் புதிய விடயம் அல்ல; ஆனால் ஒரே தடவையில் 100 தமிழர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவது இதுதான் முதல் தடவை'' என்று தெரிவித்திருக்கிறார். சேர்த்துக்கொள்ளப்படும் தமிழ்ப் பெண்கள், இலங்கை இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் கீழ் இயங்கும் தொண்டர் படையினராக இருப்பர். இவர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிபுரத்தில் விரைவில் நடைபெறும் என்று பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். அடிப்படைப் பயிற்சிகளின் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே இந்தப் பெண்கள் இப்பணிக்கு அமர்த்தப்படுவார்கள், இணைத்துக் கொள்ளப்படவுள்ள பெண்களின் பெற்றோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்து முறைப்படி, இணைப்பு சம்பிரதாயங்கள் இடம்பெறும் என்று இராணுவப் பேச்சாளர் கூறினார். இலங்கை உளவுப் பிரிவில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இராணூவப் பணிக்கென சேர்க்கபப்ட்டுள்ள 100 தமிழ் பெண்களுள் முன்னாள் பெண் போராளிகளும் அடங்குவர் என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை ராணுவத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 100 பேரும், இலங்கை ராணுவ மகளிர் பிரிவின் 6-ம் பிரிகேட் படைப்பிரிவில் பணியாற்றுவார்கள் என பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். வன்னியில் நிலவும் வேலைவாய்ப்பின்மை காரணமாக தான் பெற்றோர் தம் பிள்ளைகளை இராணுவத்தில் சேர முன்வந்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தொடர்புபட்ட செய்தி தமிழ் யுவதிகளை இலங்கை இராணுவத்தில் சேர்க்க நேர்முக தேர்வு

அதிகம் பார்க்கப்பட்டவை