
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை "அம்மையார்" என்று ஊடக ஆசிரியர்கள் மாநாட்டில் உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. திசநாயக்க உளறிய சம்பவம் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் பத்திரிகை ஆசிரியர்களை அவ்வப்போது மகிந்த ராஜபக்ச நேரில் அழைத்து தன் நிலைப்பாட்டை சரிசெய்து கொள்ள முயற்சிப்பது வழக்கம்.
இவ்வாறுதான் நேற்றும் பத்திரிகை ஆசிரியர்களை அழைத்து மகிந்த ராஜபக்ச பேசினார். அப்போது பல்கலைக்கழக ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக அந்நாட்டின் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க விளக்கம் அளித்தார்.
அப்போது, இலங்கையில் பெண் ஜனாதிபதியை அழைப்பது போல "ஜனாதிபதியானி" மகிந்த ராஜபக்ச அவர்கள் எனக் கூற எல்லோருக்கும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிட்டது.
மகிந்த ராஜபக்சவுக்கும் செம கடுப்பு. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதியானியின் காலம் முடிந்துவிட்டது என்று சந்திரிகாவை நினைத்து சொல்ல அப்போதுதான் அமைச்சருக்கே என்ன சொன்னோம் எனப் புரிந்திருக்கிறது.
பின்னர் அசடு வழிந்தபடியே தொடர்ந்திருக்கிறார் அமைச்சர் திசநாயக்க.
உண்மையிலேயே வாய்தவறிதான் திசநாயக்க மகிந்த ராஜபக்சவை அப்படி அழைத்தாரா? அல்லது மகிந்தவை வெறுப்பேற்றும் விதமாக அப்படி சொன்னாரா? என ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
0 kommentarer