இந்தியாவின் கானல் மாவட்டத்திலுள்ள தேசிய பாற்பண்ணை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வில் ஈடுபட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த கலாநிதிப் பட்டம் பெற்ற மாணவியொருவர் நேற்று முன்நாள் வியாழக்கிழமை இனந்தெரியாத இளைஞர் கும்பலின் தாக்குதலுக்குள்ளான நிலையில் படுகாயமடைந்துள்ளார்.
பாற்பண்ணை தொழில் நுட்ப திணைக்களத்தைச் சேர்ந்த 42 வயதான நாரயண என்பவரே தாக்குதலுக்குள்ளான நிலையில் படுகாயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலையில் படுகாயமடைந்த இவர் ஆபத்தான நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தையிலிருந்து முச்சக்கரவண்டியில் பல்கலைக்கழக விடுதிக்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இளைஞர் கும்பல் இவரது கைப்பை மற்றும் தங்க நகைகளை பறிக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட கைகலப்பின் போது இவர் முச்சக்கர வண்டியிலிருந்து தவறி வீழ்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
0 kommentarer