
இலங்கை உள்ளிட்ட சட்டவிரோத குடியேறிகள் பலர் பாகிஸ்தானில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் மொத்தமாக ஐந்து மில்லியன் சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருக்கின்றனர்.
இலங்கை, பங்களாதேஸ், இந்தியா, ஈரான், ஈராக், சோமாலியா, ஜோர்தான், உஸ்பெகிஸ்தான், எகிப்து, பர்மா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், அசர்பய்ஜான் உள்ளிட்ட 26 நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் இவ்வாறு சரணடைந்துள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகளின் அதிகரிப்பினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகளினால் நாட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான சட்டவிரோத குடியேறிகள் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் மட்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் சட்டவிரோத குடியேறிகள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



0 kommentarer