கொழும்பில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் கோத்தாபய பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளின் அனைத்துப் பொறுப்புகளையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே ஒருங்கிணைத்து வந்திருந்தார்.
அதன் காரணமாக கொழும்பு மாநகராட்சியை ஆளுங்கட்சி கைப்பற்றுமாக இருந்தால், அந்த வெற்றியின் கதாநாயகனான கோத்தாபய ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு உள்வாங்கி, பிரதமர் பதவியில் அமர்த்துவது ஜனாதிபதியின் நோக்கமாக இருப்பதாக அறியப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு மிகவும் நெருக்கமானவரும், தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகமுமான லக்ஷ்மண் ஹுலுகல்லை மூலமாகவே இந்தத் தகவல்கள் கசிந்துள்ளன.
அவ்வாறு கோத்தாபய ராஜபக்ஷவை பாராளுமன்றம் கொண்டுவருவதாயின் தற்போதுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



0 kommentarer