Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

தமிழரின் தேசிய அபிலாசை கொழும்பு தேர்தலிலும் மனோ கணேசனின் வெற்றியின் ஊடாக உறுதிபடட்டும். இவ்வாறு எதிர்வரும் 08 ம் நாள் நடைபெற இருக்கின்ற கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் குறித்து கிளிநொச்சி மற்றும் வன்னி மண்ணின் சார்பில் சி.சிறிதரன் பா.உறுப்பினர் தெரிவித்தார்.


அன்புக்குரிய கொழும்பு வாழ் தமிழ் உறவுகளே!

இலங்கை மண்ணில் தமிழர்களின் வாழ்வும் அவர்களின் நீண்ட போராட்ட அபிலாசைகளும் எவை என்பதை எல்லோரும் அறிவோம். அந்த வரலாற்று பாதையில் எதிர்கொண்ட இரத்தமும் சதையுமான அர்ப்பணிப்பு மிகுந்த வாழ்வின் நினைவுகளோடும் தமிழர்களின் எதிர்கால அரசியல் பயணிக்கவும், பரிணமிக்கவும் வேண்டிய சூழல் உருவாகியிருக்கின்றது.

அதன் வடிவமாகவே வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்த வெற்றி வெளிப்படுகின்றது.

இவ்வெற்றி இலங்கைத் தீவில் தமிழர்கள் ஒற்றுமையோடு ஒன்றிணைந்து நின்றால் அவர்களின் நீண்ட உரிமை வேண்டிய போராட்டத்தின். இன்னொரு பரிமாணத்தை உருவாக்கும் என்ற சேதியை சொல்லியிருக்கின்றது.

பல்லினச் சமூகம் வாழ்கின்ற கொழும்பு மாநகரில்;.தமிழர்கள் ஒரு வரலாற்று மாற்றத்தையும் தமிழர்கள் நிலை எங்கிருந்தாலும் ஒரே உணர்வென்ற அரசியல் சேதியையும் உலகிற்கு காட்டவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்றைய தமிழர்களின் அரசியல் சூழலில் கௌரவ.மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி தலைநகர் வாழ் தமிழர்களின் தன்மானக் கட்சியாக உருவெடுத்து கொழும்பு மாநகரில் ஆட்சிப்பீடம் ஏறி அதனை அழகுபடுத்த தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது வரலாற்றின் நியதி என்றால் அதனை வெற்றி கொள்ள அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட்டு தலைநகரில் தமிழர் ஆட்சி உருவாக வாக்களிப்பதே வரலாற்றின் கடமையாகும்.

பெரரும்பான்மைக் கட்சிகளான இரண்டு கட்சிகளும் ஒன்றிற்கு ஒன்று குறைவின்றி நூற்றுக்கணக்கான கறைபடிந்த அத்தியாயங்களை தமிழர்களின் வரலாற்றில் உருவாக்கினர் என்பதையும் யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

தமிழர்களின் வரலாற்றில் பெரும்பான்மையின் இரண்டு இனவாதக் கட்சிகளும் நிகழ்த்திய கொடூர வரலாற்றை யாரும் மறப்பதில்லை.முள்ளிவாய்க்காலின் உயிர்களின் ஓலம் இன்னும் இதயங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

காணாமல் போன உறவுகளை இன்னும்தமிழ் உறவுகள் தேடியலைகிறார்கள்.ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.இவற்றை நிகழ்த்தியவர்கள் யாரென்பதை தமிழ்ச்சமுகம் நன்கறியும்

எனவேதான் நடந்து முடிந்த தேர்தல்களில் எல்லாம் வட-கிழக்கில் தமிழர்கள் ஒரேமாதிரியான தீர்ப்பை தமிழர்கள் அளித்திருக்கின்றார்கள்.

இதன்காரணமாக தமிழர்களுக்கு வினைவிதைத்தவர்களுக்கு சர்வதேசரீதியாக நெருக்கடியான சூழலும் ஏற்பட்டிருக்கின்றது.இந்த சூழ்நிலையில் கொழும்புவாழ் தமிழினத்தின் தீர்ப்பையும் சர்வதேசம் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றது.

இந்த வரலாற்றுத் தீர்ப்பை கௌவர.மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறவைத்து கொழும்புவாழ் தன்மானத்தமிழர்கள் நிச்சயம் எழுதுவார்கள் என்பதே உலகத் தமிழர்களின் பேரவா.

ஏணிச் சின்னத்திற்கு அருகே வாக்களிப்பதே கொழும்பு வாழ் தன்மானத் தமிழர்களின் இன்றைய வரலாற்றுக் கடமை.

அதிகம் பார்க்கப்பட்டவை