இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இலங்கை பின்பற்றுமாறு தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இந்நிலையில் இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் இலங்கையின் வாழ்நாள் குறைந்து விடும்.
அமெரிக்காவில் உள்ள சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இந்த வலியுறுத்தலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவை தெரிவிக்கவேண்டும் என்று குறித்த இரண்டு அமைப்புகளும் கேட்டுள்ளன.
பொது அமைப்புகளும் இந்த விடயத்தில் முக்கிய கவனத்தை செலுத்தவேண்டும்.
அண்மையில் லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் பொதுமக்களின் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தின என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு உதவிப்பணிப்பாளர் எலின் பேர்சன் Elaine Pearson தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்ற உயிரிழப்புகளை தடுக்க சர்வதேசம் அன்று தவறிவிட்டது. எனினும் இன்றாவது அது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று Elaine Pearson கோரியுள்ளார்.
நிரந்தர சமாதானத்தின் போது இந்த குற்றங்கள் கணக்கெடுக்கப்படாவிட்டால் இது எதிர்கால முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
ஆப்கானிஸ்தான் மற்றும் கொங்கோ ஆகிய நாடுகள் இதற்கு உதாரணங்களாகும்.
இலங்கையின் உள்நாட்டு போர்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் தமிழ்மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் முன்னெடுக்கப்படாவிட்டால் அது இலங்கையின் குறுகிய வாழ்வு ஒன்றுக்கு வழியேற்படுத்தி விடும் என்றும் Elaine Pearson ஐபிஎஸ் இணைத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்.
முன்னர் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை இனங்காணாமை காரணமாகவே இன்றும் யாழ்ப்பாணத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இன்று எதிர்க்கட்சிகள் நீதிமன்றங்கள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் Elaine Pearson கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஊடக தொடர்பு பணிப்பாளர் சாரொன் சிங் (Sharon Singh) தமது கருத்தில் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு மனித உரிமைகள் தொடர்பிலான உண்மை விசாரணைகளில் நீதி வழங்குவதில் இருந்து தோல்வி கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் இலங்கையின் வாழ்நாள் குறைந்து விடும்!- சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம்
Lagt inn av
chandran
17.09.11



0 kommentarer