அமெரிக்காவில் பாரிய நிதித் தொகையொன்றை மோசடி செய்த இலங்கைப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து வசித்து வந்த சிங்களப் பெண்ணொருவரே அவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பர்முடாவை அண்மித்த பிரதேசத்தில் வசித்து வந்த 36 வயதான ஆரச்சிகே சந்திமா என்ற சிங்களப் பெண், தனக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலியான ஆவணங்களை முன்வைத்து நான்கு தடவைகள் காப்புறுதிப் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார்.
அவ்வாறு அவர் மோசடி செய்த மொத்தப் பணம் 76,297 அமெரிக்க டொலர்களாகும். ,லங்கையின் நாணயப் பெறுமதியில் 83 ,லட்சத்து 92 ஆயிரத்து 670 ரூபாவாகும்.
மோசடியாக காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவிலிருந்து தப்பியோட முற்பட்ட நிலையில் பர்முடா பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.



0 kommentarer