Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

தனக்கு ஏற்பட்ட தாங்க முடியாத வறுமை காரணமாக தனது ஐந்தாவது குழந்தையான 4 வயது ஆண் குழந்தையை ஆற்றில் வீசியுள்ளார் சிங்களத் தாய் ஒருவர். இச்சம்பவம் கடந்த 11 ஆம் திகதி கொழும்பிற்கு தெற்கே பாணாந்துறையில் இடம்பெற்றுள்ளது.
பாணாந்துறை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த கிராமத்தில் வசித்து வந்தவரான ஐந்து குழந்தைகளின் தாயாரான 30 வயதுடைய சிங்களப் பெண்மனியே தனது நான்கு வயது மகனான அமில சந்தருவன் பெர்ணாண்டோ வை களுத்துறை, களுகங்கை ஆற்றில் வீசியுள்ளார்.

தண்ணீருக்குள் அமிழ்ந்த குழந்தை அவ்வழியால் சென்றுகொண்டிருந்த வாகன சாரதியொருவரால் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட‌து.

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 10 நாட்களாக உயிருக்குப் போராடிய அக் குழந்தை, சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 40 மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும்பு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தையை ஆற்றில் வீசிய தாயாரைக் கைதுசெய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். குழந்தையின் தந்தையார் குடும்பத்தை கை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இவரின் ஏனைய‌ நான்கு குழந்தைகள் ஏற்கனவே வெவ்வேறு குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் தனித்தனியாகப் பராமரிக்கப் பட்டு வருகின்றனர்.

இத்தாயார் லாட்டரி சீட்டுக்களை விற்று இந்த‌ ஐந்தாவது குழந்தையை பராமரித்து வந்ததாகவும் தம்மால் இனிக் குழந்தையைப் பராமரிக்க முடியாது என்பதால் அதை ஆற்றில் வீசியதாகவும் அந்த சிங்களத் தாய் போலீசிடம் தெரிவித்துள்ளாராம்.

அதிகம் பார்க்கப்பட்டவை