Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

யாழ் மறை மாவட்ட ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் வன்னியில் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற புதுமாத்தளன் பிரதேசத்திற்கு படையினரின் அனுமதியுடன் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 29ம் திகதி அவர் புதுமாத்தளன் பிரதேசத்திற்கு படையினருடன் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்து விட்டு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயர் தனது இந்த பயணம் குறித்தும், அங்கு தான் பார்வையிட்ட நிலைமைகள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கக் கூடாது என்று அரச தரப்பு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அங்கு தான் கண்ட போரின் கொடூரங்களையும், அழிவுகளையும், எச்சங்களையும் பார்வையிட்டுத் திரும்பிய ஆயர் அவர்கள் எமது மக்களின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளதாக அறியவந்துள்ளது.

அத்துடன், அங்கு எல்லாமே அழிவடைந்து போயுள்ளதாகவும், பார்க்கும் இடங்கள் எல்லாம் போரின் கோரமுகத்தை அடையாளப்படுத்தி நிற்பதாகவும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

வன்னியின் மேலும் சில பகுதிகளுக்கும் ஆயர் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் தான் பயணம் செய்த பகுதிகளில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளதாகவும், மக்களின் வாழ்வாதாரமான வயல் நிலங்கள் பற்றை காடுகளாக காட்சி தருவதாகவும், வீடுகள் அனைத்தும் அழிவடைந்து வெறும் கட்டிட இடிபாடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், மக்களின் கால்நடைகள் அனைத்தும் தொலைந்து போயுள்ளதாகவும் ஆயர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் பார்க்கப்பட்டவை