| இலங்கை நாடாளுமன்றத்தால் அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதை பவ்ரல் எனப்படும் நியாயமான நேர்மையான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு விமர்சித்துள்ளது. |
இது பற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பவ்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹோடியராச்சி இது தொடர்பாக குறிப்பிடுகையில், இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கப் போகிறது எனவே இப்போது இது போன்ற அவசர கால சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவையில்லை" என்றார். அதே நேரம் அவசர கால நிலை காரணமாக தேர்தல் நடைமுறைகளுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றும், ஆனாலும் சில நேரங்களில் அரசியல் நோக்கங்களுக்காக இதை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். |
இலங்கையில் அவசர காலச் சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதை பவ்ரல் அமைப்பு விமர்சித்துள்ளது
Lagt inn av
chandran
06.02.10



0 kommentarer