| குருநாகல் பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்தின் சுகாதார மேம்பாட்டு மற்றும் தொற்றுநோய் தடுப்புத்துறை அமைச்சர் ஜெயரத்ன ஹேரத்தின் அலுவலகத்தின் மீது இன்று இரவு மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். நால்வர் காயமடைந்துள்ளார். |
இந்தக்கொலையை அடுத்து ஜனாதிபதி தேர்தல் வன்முறைகளில் பலியானோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதில் இருவர், ஆளும் கட்சியையும் இருவர் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பையும் சேர்ந்தவர்களாவர். இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும், 8 நாட்கள் இருக்கும் நிலையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. |



0 kommentarer