தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வைத்தியராக செயற்பட்ட ஒருவர் இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் கமரா மூலம் சுயமான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதிவான் ஆயிஸா ஆப்டீன் முன்னிலையில், இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த வைத்தியர் சிவபாலன் சின்னத்துரை என்பவரே இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார் இவர் தற்போது இரகசிய பொலிஸாரின் காவலில் இருந்து வருகிறார். தமது வாக்குமூலத்தின் போது தமக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இருந்த தொடர்பை அவர் விபரித்துள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய இவர் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் போராளிகளுக்கும் வைத்தியராக பணியாற்றினார் என இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இவருடன் கைது செய்யப்பட்டு விடுதலையான மற்றைய நான்கு வைத்தியர்களில் மூவர் அரசு பணிபுரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஒருவர் உயர் படிப்புக்காக சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் வைத்தியர் நீதிமன்றத்தில் கமரா மூலம் வாக்குமூலம்
Lagt inn av
chandran
09.10.09



0 kommentarer