Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

தமிழக எம்.பி.க்கள், குழு முதல்வரிடம் அளித்த அறிக்கையில், இலங்கை முகாம்களில் உள்ள மக்களுக்கு குடிநீர், பால் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்கவில்லை என்றும், மாற்று ஆடைகூட இல்லாமல் ஒரே ஆடையில் பல நாட்களாக இருப்பதைக் காண முடிந்ததாகவும் எம்.பி.க்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை சென்னை திரும்பிய அவர்களை, விமான நிலையம் வரை சென்று தமிழக முதல்வர் கருணாநிதி வரவேற்றார். பின்னர், இலங்கைப் பயணம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்கள். அத்துடன், அங்குள்ள நிலவரம் குறித்து முதல்வரிடம் நேரிலும் விளக்கிக் கூறினார்கள்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,
முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களில், முதல் கட்டமாக ஐம்பத்தெட்டாயிரம் பேர் அடுத்த 15 தினங்களுக்குள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும், அந்தப் பணிகள் நாளை முதல் தொடங்கும் என்றும் எம்.பி.க்களிடம் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
'முகாம்களில் குறை இருப்பது உண்மை' முகாம்களில் சில குறைபாடுகள் இருப்பது உண்மை என்று எம்.பி.க்கள் தன்னிடம் தெரிவித்திருப்பதாகவும் கருணாநிதி கூறினார்.
போர் நடைபெற்ற காலத்தில், முகாம்களில் இருந்த தமிழ் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்ததாகவும், அனைவரும் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும் எம்.பி.க்கள் தன்னிடம் கூறியதாக கருணாநிதி தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது தொடர்பாக இலங்கை ஜனாதிபதியிடம் எம்.பி.க்கள் குழு எடுத்துரைத்தபோது, அதற்குத் தீர்வு காண இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பை நாடியிருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.
எம்.பி.க்கள், குழு முதல்வரிடம் அளித்த அறிக்கையில், தங்களது சுற்றுப்பயண விவரங்களை முழுமையாகத் தெரிவித்துள்ளது. முகாம்களில் உள்ள மக்களுக்கு குடிநீர், பால் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்கவில்லை என்றும், மாற்று ஆடைகூட இல்லாமல் ஒரே ஆடையில் பல நாட்களாக இருப்பதைக் காண முடிந்ததாகவும் எம்.பி.க்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் விநியோகிக்கும் இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்ததாகவும் எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.
தங்களை சொந்த ஊர்களுக்கு விரைவில் திருப்பி அனுப்ப உதவுமாறு முகாம்களில் உள்ள மக்கள் கெஞ்சினார்கள் என்றும், அவர்களைத் திருப்பி அனுப்ப இலங்கை அரசு இரண்டு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கும் என்று தோன்றுவதாகவும் அந்த அறிக்கையில் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் பார்க்கப்பட்டவை