சர்வதேச ரீதியாக கடனட்டை மோசடியில் ஈடுபட்ட வந்த குழு ஒன்றின் பிராதான சூத்திரதாரி என கூறப்பட்டு இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து பாரிய போலி கடனட்டை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களும் மீட்கப்பட்டதாக இந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பெரம்புத்தூர் பகுதியில் போலி கடனட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்ட வேளையிலேயே செம்பியம் காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரிக்குமார் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள அவர் கடந்த 15ம் திகதி கைதானார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, இந்த போலி கடனட்டை மோசடி குழுவின் தலைவர் உமேஸ் என்பவர் எனவும், அவர் கனடாவில் வசிப்பதாகவும் தற்சமயம் சென்னையில் உள்ள போரூர் பகுதியில் தங்கிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஹரிக்குமாரிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டதன் பின்னர், இந்த வழக்கு மத்திய குற்றவியல் புலானாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, மோசடிக்குழுவின் தலைவர் என கூறப்படும் உமேஸின் வீட்டை, விசேட காவற்துறை குழு ஒன்றை சுற்றிவளைத்து, அவரை கைது செய்தது.
கைதான உமேஸ் ஒரு பொறியிலாளர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, அவர் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முகவர்களை நியமித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர் தமிழகத்தில் மாத்திரம் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டுள்ளதுடன், பல்வேறு நாடுகளில் 1 லட்சத்து 50 போலி கடனட்டைகளை பயன்படுத்தியிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.



0 kommentarer