மனித உரிமை விசாரணைகள் உட்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்கு கீழ்படியாமல், இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கோரமுடியாது என ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான குழுத் தலைவர் பேனாட் சேவேஜ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின், சட்டவிதிகளும், ஜி.எஸ்.பி. பிளஸ் ஒழுங்குகளும், மனித உரிமை தொடர்பான விசாரணைகளை அனுமதிக்கின்றன. இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு அதனை கேட்பதற்கு முடியாது.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடக்கும் போது அந்த கோரிக்கையை விடுக்கமுடியும் என சேவேஜ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகைக்கு விண்ணப்பிக்கும் போது, அது தொடர்பான நிபந்தனைகளை அறிந்த நிலையிலேயே விண்ணப்பித்தது என சுட்டிக்காட்டியுள்ள அவர்,ஏனைய நாடுகளும்,ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தின் கீழேயே அந்த வரிச்சலுகையை பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.



0 kommentarer