இலங்கை பிரதமர் ரட்னசிறி விக்ரமசிங்க, அமெரிக்கா ராஜாங்க செயலர் ஹிலரி கிளின்டன் தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்துக்கு ஐக்கிய அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கையின் அமெரிக்காவுக்கான தூதுவர் ஜாலிய விக்ரசூரியவை நேரடியாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை வானொலி ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியில், ஹிலாரி கிளின்டன், மோனிகா லெவின்ஸ்கீயின் வழக்கை மறந்து விட்டு பேசுவதாகவும், அவரது வீட்டுப்பிரச்சினையை முதலில் கையாளுமாறும் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் யுத்த காலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதாக ஹிலாரி தெரிவித்திருந்தமை தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்ட்ட வேளையிலேயே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
காலையில் ஒலிபரப்பான அந்த செவ்வியில், 'மேக்க மார மகுலக்நே, கிளின்டன் நோனாட்ட மோனிகா கென அமத்தக வெலா" என சிங்களத்தில் கூறியிருந்தார். அதாவது 'இது ஒரு பாரிய விசர்தனம், கிளின்டன் அம்மணி மோனிக்காவை பற்றி மறந்துவிட்டார்" என குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க உதவி செயலர் ரொபேர்ட் பிளக், கிளின்டன் பெண்கள் மீதான வன்புணர்வு தொடர்பில் ஹிலாரி வெளியிட்ட கருத்துக்கு, இலங்கை அரசாங்கம் எதிராக கோசமிட்டதுடன், அது தொடர்பில் சடுதியான தெளிவறிக்கையையும் அமெரிக்காவிடம் இருந்து எதிர்பார்த்தது.
ஆனால் இதுவரையில் ஹிலாரி கிளின்டனின் சொந்த விடயம் குறித்து பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ள கருத்துக்கு இதுவரையில் எவ்வித தெளிவறிக்கையும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.



0 kommentarer