Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் மாநாட்டில் இலங்கை தொடர்பில் வெவ்வேறு விடயங்கள் அவதானிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையில் அனுமதிக்கப்படுகின்ற உத்தியோகபூர்வ ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் குறித்தும் அவர்களுக்கு எதிராக அரசாங்க படையினர் மேற்கொண்டு வரும் துன்புறுத்தல்கள் தொடர்பிலும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரும் துன்புறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
எனினும் இதனை இடைமறித்து கேள்வி எழுப்பிய இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர்கள், அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்கள் தொடர்பில் விசாரிக்க முடியுமானால் அவர்களை ஏன் விடுவிக்க முடியாது என கேட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை என்ன முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு வழமை போல் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதாக பேச்சாளர் தெரிவித்ததாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தோனேசிய, அவுஸ்திரேலிய, கனடா போன்ற நாடுகளில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் குறித்து என்ன செய்கிறீர்கள் என மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும் அதற்கு அவர் பதில் வழங்காமல், வேறொருவரை கைகாட்டியமை புதுமையாக இருந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் முழுவதும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பல்வேறு பதில்களும் உறுதியளிப்புகளும் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றை ஐக்கிய நாடுகள் சபை காப்பாற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹெய்ட்டியில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்கான திணைக்களத்திற்கு புதிதாக மேலும் 198 இலங்கையர்களை இணைத்துக் கொள்வது குறித்தும் செய்தியாளர்களுக்கும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பாரிய யுத்த குற்றங்களை புரிந்ததாகவும், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை துருப்பினரை அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தலாமா என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் வழங்கிய திணைக்களத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக், திணைக்களம் இது தொடர்பில் அனைத்து நாடுகளுடனும் கோரியதற்கு அமையவே அவர்கள் ஒப்பந்தத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் தொடர்பான தெளிவான விபரத்திரட்டலுக்கு பின்னரே அவர்கள் இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இதற்கிடையில் ஏற்கனவே ஹெயிட்டியில் இருந்து சில இலங்கை துருப்பினர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் நாட்டுக்கு திருப்பி அனுப்பபட்டமையையும் இன்னர் சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது

அதிகம் பார்க்கப்பட்டவை