Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

இந்தோனேசியா, ஜாவாவில் உள்ள இலங்கைப் படகில் உள்ள இலங்கை அகதிகள் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அவர்கள் கொல்லப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கில் உள்ள முகாம் ஒன்றில் இருந்து தப்பி சென்று அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். முத்துக்குமரன் என்ற அவர், கிளிநொச்சியில் இருந்து அரச சார்ப்பற்ற நிறுவனம் ஒன்றில் கடந்த 2007ம் ஆண்டுக்காலப்பகுதியில் பணியாற்றிவந்துள்ளார். அதன் பின்னர் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இராணுவ தடுப்பு முகாமான வவுனியா மெனிக்பார்மில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பணியாற்றிய ஒருவருக்கு பணம் வழங்கி, அங்கிருந்து தம்மை வெளியேற்றுமாறு கோரியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய குமரன், ஆட்கட்த்தல் காரர்களுக்கு நிதி வழங்கி, அவுஸ்திரேலியாவுக்கு தப்பி சென்று தாம்,கடந்த ஓகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் பெற்றதாக தெரிவித்துள்ளார். அவர் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போது, இலங்கையின் முகாம்களில் இடம்பெறுகின்ற பல்வேறு வன்முறைகள் மற்றும் புறக்கணிப்புகளை சுட்டிக்காட்டியுள்ளார். நோய்வாய்பட்டுள்ளவர்களை அவசரமாக சிகிச்கைக்கு எடுத்துச் செல்லக் கூட முடியாத நிலை காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்தோனேசியாவில் உள்ள இலங்கையர்களில் பெரும்பான்மையானவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் இருந்து தப்பி வந்தவர்கள்களாகும் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில், அவர்கள் இலங்கை அரசாங்க அதிகாரிகளால் கொல்லப்படலாம் அல்லது, கைது செய்து துன்புறுத்தப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் பார்க்கப்பட்டவை