இலங்கை தமிழர் தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்துக்கும் தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கும் இடையிலான சந்திப்பு ஓன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு நிரந்தர பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றிறை நிறைவேற்றி கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் துரித பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் வேளையிலேயே சிதம்பரம் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் நாடாளுமன்ற குழு ஒன்றை இலங்கை அனுப்பி வைப்பது என்ற கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் பி. சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிதம்பரம் அவ்வாறான ஒரு திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆலோசனை நடத்திவருவதாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் விரைவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



0 kommentarer