ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷ தெற்கு இளைஞர்கள் 250 பேருடன் யாழில் இப்போது தங்கியுள்ளார். அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் கோட்டையில் இலங்கை தேசியக்கொடியை அதிகாரபூர்வமாக ஏற்றுகிறார் என யாழ் செய்திகள் கூறியுள்ளன.
1996 இல் யாழ் கோட்டையை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்திருந்த காலத்தில் அப்போதைய பாதுகாப்பமைச்சர் அநுருத்த ரத்வத்தை கோட்டையின் முற்புறமுள்ள சமவெளியில் இலங்கைத் தேசியக் கொடியைப் பறக்க விட்டிருந்தார். இன்று கொடியேற்ற விழாவில் பங்குகொள்ள முன்னர், நாமல் யாழ் மத்திய கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தைத் திறந்து வைத்தார். இன்று ஏற்றப்படும் தேசியக் கொடி நிரந்தரமாக கோட்டையில் இருக்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.



0 kommentarer