இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 260 பேரை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்துள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளுக்கு அருகில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றை, இந்தோனேசிய போர்க் கப்பல் ஒன்று முடக்கிய போது, அதில் சட்டவிரோதமாக பயணித்த இந்த இலங்கையர்கள் கைதாகியுள்ளனர்.
இதன் பின்னர் மேலும் சில இந்தோனேசிய போர் கப்பல்களை ஜாவா தீவின் பென்டன் மாகாண கடற்பரப்புக்கு அனுப்பி, அங்கிருந்த அகதிகளை மீட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் ஏராளமான சிறுவர்களும் பெண்களும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 kommentarer