வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு திருகோணமலை, ஈச்சலம்பத்தை செண்பகம் மகாவித்தியாலயத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந் தவர்களில் 15 ஆண்கள் இனந்தெரியாதவர்களால் நேற்றுக் கடத்திச்செல்லப்பட்டனர்.
சீருடை தரித்து வந்தவர்களே அவர்களைக் கடத்திச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது: வவுனியா முகாமில் இருந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் திருகோண மலைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் இடைத்தங்கல் முகமான செண்பகம் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று அங்கு வந்த சீருடை தரித்த இனந்தெரியாதவர்கள் முகாமில் உள்ளவர்களை விசாரித்த பின்னர் அங்கிருந்து 15 பேரைக் கடத்திச் சென்றனர். கடத்திச் செல்லப்பட்டவர்கள் திருமணமானவர்கள்; 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட குடும்பத் தலைவர்கள் ஆவர். கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்கள் குறித்து நேற்று மாலை வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஈச்சிலம்பத்தை இடைத்தங்கல் முகாமிலிருந்து 15 பேர் இனந்தெரியாதவர்களால் கடத்தல்
Lagt inn av
chandran
18.10.09



0 kommentarer