இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தயாரித்த அறிக்கை, அமெரிக்கக் காங்கிரஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின், போர்க் குற்றங்கள் தொடர்பான தூதுவர், ஸ்டீபன் ரெப் இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ராஜாங்க திணைக்களத்தில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், கலந்துக்கொண்ட திணைக்களத்தின் பேச்சாளர் இயன் கெலியிடம், அறிக்கை தொடர்பாக வினவப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த அவர், அறிக்கையில் அடங்கியிருக்கும் விடயங்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டார்.



0 kommentarer