Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

இலங்கையர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சட்ட விரோத படகு ஒன்றை அவுஸ்ரேலிய கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம், நேற்று அவுஸ்திரேலியாவின வடக்குப் பகுதியின் கொக்கோஸ் கீலிங் தீவுகளுக்கு அப்பால் 630 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில், அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முனைந்த ஆறாவது படகாகும். இந்த படகு இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் கரையோர கண்காணிப்பு வானூர்திகளால், கண்டு பிடிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ கோனர் தெரிவித்துள்ளார். குறித்த படகில் இருந்த சிலர், கடல் வாந்தி நோய்களுக்கு உட்பட்டிருந்ததால், அவர்களுக்கு தண்ணீரும் உணவும் மனிதாபிமானமான முறையில் விநியோகிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் இந்த படகில் உள்ளோரை கரையோர பாதுகாப்புப் பிரிவினர் காப்பாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்மஸ் தீவிற்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள இவர்களை இனம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோனர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதம மந்திரி, 2002 ஆம் ஆண்டின் இறுதியில் பதவி ஏற்று, குடிவரவு சட்டத்தில் தளர்வுகளை ஏற்படுத்தியதன் பின்னர் இதுவரை 32 சட்ட விரோத படகுகள், அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளன. இந்த படகுகளின் மூலம், இலங்கையர் உட்பட ஈராக், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாட்டினரும் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகம் பார்க்கப்பட்டவை