Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுடன் பெண் விடுதலைப்புலி வருவதாக மர்ம போன் வந்ததால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் ஒரு போன் அழைப்பு வந்தது. "கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் செல்லும் ஐலாண்ட் எக்ஸ்பிரஸில் எஸ்-10 பெட்டியில் ஒரு பெண் விடுதலைப்புலி இருக்கிறார். அவரது பையில் வெடிகுண்டு இருக்கிறது" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். போலீசார் பரபரப்படைந்தனர். உயர் அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவித்தனர். ரயில் எர்ணாகுளம் ஸ்டேஷனுக்கு வந்ததும் அதில் ஏறி தீவிர சோதனை நடத்தினர். போன் நபர் கூறிய அதே அடையாளத்தில் ஒரு பெண் இருந்தார். அவரிடம் பை எதுவும் இல்லை. போலீசார் விசாரித்தனர். அவர் சைகையில் பதிலளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர் வாய்பேச முடியாதவர் என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. போன் செய்தவர் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் பார்க்கப்பட்டவை