அமெரிக்காவில் இயங்கும் இலங்கை தமிழர் படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் உப ஆணைக்குழுவுக்கு மனு ஒன்றை கையளித்துள்ளது.
அதில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி சலுகையான ஜிஎஸ்பி பிளஸை நீடிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளது.
இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியுள்ளது என்ற அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்படக்கூடாது என அமெரிக்க அமைப்பு கோரியுள்ளது.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி இலங்கை சிங்களவர்களுக்குரிய நாடு என கூறியுள்ள நிலையில் யுத்த வெற்றி குறித்த உரையில் இலங்கையின் ஜனாதிபதி,நாட்டில் சிறுபான்மையினர் இல்லை என்ற கருத்தை வெளியிட்டமையையும் அமெரிக்க அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை எதிர்வரும் முதலாம் திகதி கூடவுள்ள ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான உப ஆணைக்குழு இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் தொடர்பான தமது நிலைப்பாட்டை ஒக்டோபர் 15 ஆம் திகதி வெளியிடும் என ஐரோப்பிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நீடிக்கவேண்டாம்: தமிழர்களுக்கான அமெரிக்க அமைப்பு
Lagt inn av
chandran
28.09.09



0 kommentarer