சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய, தமிழ் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்,யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த ரட்ணசேகரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்ப விசாரணைகளில் இருந்து இவர் கொழும்பில் உள்ள தமது உறவினரை பார்க்க வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாதுகாப்பு தரப்பின் தகவல்படி இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் குமரன் பத்மநாதனின் நெருங்கிய சகா என்றும் குமரன் பத்மநாதனுக்கு சொந்தமான தனியார் கப்பலில் பணியாற்றினார் என்றும் தெரியவந்துள்ளது இந்தநிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.



0 kommentarer