Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

தனி ஈழம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்த இந்தியா மற்றும் இலங்கை அரசு தயாரா? என்று திரைப்பட இயக்குநர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை சூலூரில் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற ஈ.வே.ரா. பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய சீமான் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். உலக நாடுகள் பலவும் பிரிந்தபோது, அதற்கு எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை. இலங்கையில் தனி ஈழம் என்றால் மட்டும் எதிர்க்கின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம் என, இன மற்றும் மொழி வாரியாக நாடுகள் பிரிந்தன. பாலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கும் மத்திய அரசு ஏன் இலங்கையில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட போது, தமிழர் மத்தியில் கருத்து கேட்கப்பட்டதா? தனி ஈழம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்த இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் தயாரா?
எத்தனைமுறை எங்களை சிறைப்பிடித்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏன் என்றால் எங்களை செதுக்கிய சிற்பிகள் பெரியாரும் எங்கள் தம்பி பிரபாகரனும்தான். இலங்கையில், தமிழர் மீதான பொருளாதாரத் தடை மற்றும் போர் குறித்து யாரும் கவலைப்படவில்லை. இலங்கை இராணுவத்தை கண்டிக்கவில்லை. மாறாக அவர்களுக்கு உதவிதான் செய்யப்படுகிறது.
ஒன்றரை கோடி சீக்கியர்களுக்கு அளிக்கும் மதிப்பை, ஏழு கோடி தமிழர்களுக்கு காங்கிரஸ் தரவில்லை. உலகத் தமிழ் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் இலங்கையில் தமிழினம் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் 1 கிலோ அரிசி 1 ரூபாய் விற்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் 1 கிலோ அரிசி 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒருவேளை சாப்பாட்டுக்கு 1000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் போர் நிறுத்தம் மட்டும் அங்கு இல்லை. சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களை சுட்டு கொல்லும்போது ஏன் இந்திய இராணுவம் பாதுகாக்கவில்லை என்று தெரியவில்லை.
இலங்கை இராணுவம், 20 நாடுகளின் உதவியோடு விடுதலைப்புலிகளை அழித்ததாக அறிவிக்கிறது. அப்படியானால், அந்த அளவுக்கு விடுதலைப்புலிகளின் பலம் இருந்திருக்கும்.
இலங்கை இராணுவத்துக்கும், தமிழர்களுக்கும் இடையே நடக்கும் போர், தமிழினத்துக்கும், உலக நாடுகளுக்கும் இடையிலான போராக மாறும் என்றார் சீமான் ஆவேசமாக.

அதிகம் பார்க்கப்பட்டவை