விடுதலைப்புலிகள் தமது கடற்புலிகள் பிரிவை பலப்படுத்துவதற்காக உக்ரைன் நாட்டு நிபுணர்களை வன்னிக்கு அழைத்து வந்திருந்தனர் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன என்று பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
2002 - 2004 சமாதான காலத்தில் உக்ரைன் நாட்டு நிபுணர்கள் வன்னிக்கு வந்து கடற்புலிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்கள் என்று பாதுகாப்புத் தரப்புத் தெரிவித்துள்ளது.
தற்சமயம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படும் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் இந்த நிபுணர்கள் வருகை விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது என்றும் பாதுகாப் புத்தரப்புக் கூறியுள்ளது. வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் அரசாங்கத்தின் கடற்படையை முடக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் காரணமாக விடுதலைப்புலிகளின் திட்டம் தோல்வியில் முடிந்தது என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கு நாடுகளில் இருந்து எடுத்துவந்த இயந்திர சாதனங்கள் பின்னர் படையினரின் நடவடிக்கையின் போது வன்னியில் மீட்க்கப்பட்டன என்று கடற்படை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதேவேளை ஜப்பானிய நிபுணர்கள் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி அளித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்ததும் தெரிந்ததே.
புலிகள் தமது கடற்படையைப் பலப்படுத்த உக்ரைன் நிபுணர்களை வன்னிக்கு அழைத்து வந்தனர்: பாதுகாப்புத் தரப்பு
Lagt inn av
chandran
28.09.09



0 kommentarer