Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

வவுனியா அகதி முகாம்களில் 20 ஆயிரம் புலிகள் உள்ளனர் என கூறிக்கொண்டு நாளாந்தம் 30 - 40 பேர் காணாமல் போகின்றனர், கைது செய்யப்படுகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வேளை இதனைத் தெரிவித்த அவர், இது தொடர்பாக அங்கு மேலும் கூறியவை வருமாறு: 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆயிரம் புலிகளே இருக்கின்றனர் என்று அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சொன்னார். பின்னர் அந்த வருடம் செப்டெம்பரில் 16 ஆயிரம் புலி கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்றும் மேலும் 4 ஆயிரம் புலிகள் உயிரோடு உள்ளனர் என்றும் அவர் கூறினார். ஆனால் பின்னர் 2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்ததோடு மேலும் ஆயிரக்கணக்கான புலிகள் கொல்லப்பட்டனர் என இராணுவத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது இன்னமும் 20 ஆயிரம் புலிகள் அகதி முகாம்களில் உள்ளனர் என்று அரசு சொல்கிறது. எனவே பாதுகாப்பு அமைச்சின் தேவைக்கு ஏற்ப புலிகளின் எண்ணிக்கை மாறுபடுகின்றது. இவ்வாறு இன்னும் 20 ஆயிரம் புலிகள் உள்ளனர் என்று கூறிக்கொண்டு அகதி முகாம்களில் இருந்து தினமும் 30 40 பேர் கடத்தப்படுகின்றனர் அல்லது கைது செய்யப்படுகின்றனர். மீள்குடியேற்றம் தாமதமடைவதற்கு கண்ணிவெடிகளே காரணம் என்று அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் அது பெரிய விடயமல்ல. அகதிகளை மீள் குடியமர்த்த அமைச்சர்கள் விரும்புகின்றனர். ஆனால் ஜனாதிபதிக்கு அது விருப்பமில்லை. உண்மையிலேயே முகாம்களில் மக்கள் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று சொன்னால் அந்த முகாம்களை உலகின் பார்வைக்காகத் திறந்துவிடலாம்தானே? ஏன் அதனை ஒழிக்கின்றார்கள்? உண்மையில் மீளக் குடியேற்றம் என்பது அரச மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முன்னிலையிலேயே நடைபெறவேண்டும் என்று கூறினார்.

அதிகம் பார்க்கப்பட்டவை